Monday, February 14, 2005

காதலர் தினக் கழுதை

ஒரு கணமே வீசிய தென்றலில்
அசைவுற்ற குறுமணியின்
ஒற்றையோசை
இலேசாகத் தொனித்த தருணத்தில்
என்முன்னே தோன்றத்தான் போகிறாய்

ஒரு நொடிப்பொழுதே பரவிய
சுகந்தத்தின் ஓரிழை
சுவாசித்த நிமிடத்தில்
நம் கண்கள் சந்திக்கத்தான் போகின்றன

ஒரு மீட்டலிலே
அறுந்த தந்தியின்
அநாதம்
அதிர்ந்த பொழுதில்
உன் பார்வையை விலக்கத்தான் போகிறாய்

காதலர் தினத்தில் ஏதும் புதிதில்லை

சினேகமாக ஒரு பார்வை
உதிர்த்துவிட்டுப் போ

மலர்களின் இதழ்களை
தேவதைகள்் பிய்க்கமாட்டார்கள்
என்று கேள்வியுற்றிருக்கிறேன்.

1 comment:

Manmadan said...

அருமையான கவிதை....