# அழைப்புகள்
பலவற்றினூடே
அவசரமாய்
உமிழப்படும்
உரையாடல்களைக் காட்டிலும்
பிறகு பேசுகிறேன்
என்ற உன்
ஒற்றை வரி
அர்த்தமாய்த் தொனிக்கிறது...
# உன்
பேச்சு சுவாரசியத்தில்
கவனிக்கத் தவறிவிட்டேன்...
என்ன சொல்லிக் கொண்டிருந்தாய்?
# அர்த்தமான
உரையாடலின்மைகளுக்காகக்
காத்திருக்கின்றது
கடற்கரையின்
அந்த
ஒற்றை மணற்துகள்...
No comments:
Post a Comment